மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால், 460 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை மின்நிலையத்தின் 4 யூனிட் மூலமும் சுரங்க மின்நிலையத்தில் உள்ள 4 யூனிட் மூலமும் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், தற்போது அணையின் பாசன திறப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு மாலையுடன் நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து அணை மற்றும் சுரங்க நீர்தேக்க மின் நிலையங்களில் நடைபெற்று வந்த 460 மெகவாட் மின்னுற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது.