காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 6 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து ஆறு கன அடியாக சரிந்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.61 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 82.17 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.