மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 19 ஆயிரத்து 333 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்தது. இதன்காரணமாக தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து குறைந்திருந்தநிலையில், சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 19 ஆயிரத்து 333 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118 புள்ளி ஏழு 1 அடியாக உள்ளது. நீர் இருப்பு 91 புள்ளி நான்கு 2 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 21 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.