மேட்டூர் அணை திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கும்பகோணம் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கான செலவை, அதிமுகவினரே செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் வாய்க்கால், ஆறுகள், ஏரிகளை தூர்வாரும் பணிகள் துவங்கியிருப்பதாக குறிப்பிட்ட அவர், மேட்டூர் அணை திறப்பு தேதியினை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

Exit mobile version