மேட்டூர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

மேட்டூர் அணை பூங்காவிற்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையையொட்டி பெரிய பூங்கா உள்ளது. இதில் குழந்தைகள் விளையாடும் வகையில் தூரிகள்,சறுக்கல், பாம்பு, மான்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. அணையின் வலது கரையில் பவள விழா நினைவு

கோபுரம் ஆகியன உள்ளது. அணையின் பூங்கா நுழைவாயிலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 30க்கும் மேற்பட்ட மீன் வறுவல் கடைகள் உள்ளது. கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு

விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் மூலம் பொதுப்பணித் துறைக்கு நுழைவு கட்டணமாக 71 ஆயிரத்து 370 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version