மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11ஆயிரத்து 919 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 943 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 85 புள்ளி 87 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.