கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து இருப்பதால், கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீர்ன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. எனவே, ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க 54 வது நாளாகவும், பரிசல் இயக்க 26வது நாளாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேட்டூர் அணைக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 10 ஆயிரத்து 72 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119 புள்ளி 84 அடியாகவும், நீர்இருப்பு 93 புள்ளி 216 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.