கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,800 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 8, 500 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 7 ,800 கனஅடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 4 ஏழு டி.எம்.சி யாகவும் உள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 8 ,000 கன அடியிலிருந்து 7 ,000 கனஅடியாக குறைந்து, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன
அடியிலிருந்து 750 கனஅடியாக அதிகரித்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று நீர்வரத்து 6 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ,400 கன அடியாக படிப்படியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து காரணமாகவும், முன்னெச்சரிக்கையாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 122- வது நாளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.