மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,510 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,510 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு 6,043 கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை நிலவரப்படி 7, 510 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 7 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version