மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஜூலை மாதம் 23-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டது. நீர்திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் நீர் திறப்பு நிறுத்தப்பட வேண்டிய நிலையில், கூடுதலாக நீர்திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீர், மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.