ஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, மேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியினை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேசி.கருப்பணன், ஊராட்சி தேர்தல் குறித்த தமது முந்தைய பேச்சுக்கு விளக்கம் அளித்தார்..