suicide பாயின்ட் ஆக மாறும் மெட்ரோ ரயில் நிலையம்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 10 -ம் தேதி “உலக தற்கொலை தடுப்பு தினம்” அனுசரிக்கப்பட்டதையடுத்து டெல்லி மெட்ரோ நிலைய அதிகாரிகள் தற்கொலை தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி முதல் ஜுன் மாதங்கள் வரை மட்டும் 37 பேர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர் . நாட்டின் மிக பெரிய மெட்ரோ நிலைகளில் ஒன்றான டெல்லி மெட்ரோ நிலையத்தில் தினமும் 22 லட்சத்திற்கு மேலான பயணிகள் பயணித்து வருகின்றனர். இங்கு பலத்த பாதுகாப்பு காவலர்கள், சிசிடிவி இருந்த போதிலும் தற்கொலைகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக “உடல்நலத்தை விட மனநலம் மிக அவசியம்”, “மனநலத்தை பேணி பாதுகாக்கவும்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

வாழ்வில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வல்ல என்பது நிதர்சன உண்மை …..

 

 

Exit mobile version