மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு – தீபாவளி, விடுமுறை தினத்தை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

தீபாவளி மற்றும் விடுமுறை தினங்களை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால், வெளி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, சென்டரல், எழும்பூர் ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். அவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 மற்றும் 3ம் தேதிகளில் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version