சென்னை வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மக்களின் கூட்ட நெரிசல் மற்றும் பயண நேரத்தை வெகுவாக குறைக்க, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சிறப்பான சேவையை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளின் வசதிக்காக சேவையை அதிகரித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இனி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.