கலை மற்றும் பாரம்பரியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில், சென்னை மெட்ரோ மியூசிக் எடிட் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்கள் ரயில் நிலையம் வருவார்கள் என்பதால், அவர்களை ஈர்க்கும் விதமாகவும், இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு, பாரம்பரிய இசை மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய இசைக் கருவிகளுடன், நவீன இசைக்கருவிகளையும் சேர்த்து, கலவையான இசையை இசைக்குழுவினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியினை, ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ஏராளமானோர் வெகுவாக ரசித்தனர்.