குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம்

தமிழ்நாடில், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதியை நெருங்குவதால் இன்று ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என கூறியுள்ளது. மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version