வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல் 13 ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீ மழையும்,நன்னிலத்தில் 5 செமீ. மழையும் குடவாசலில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.