சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு வெளியிட்ட பெண்கள் பட்டியலில் தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவின் சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநிலத்தில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் பட்டியல் சமர்ப்பித்தது. ஆனால் இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. பட்டியலில் ஆண்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. சில பெண்களின் வயதும் குறைத்து காட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.