தமிழகத்தல் தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள், இடம் மாற்றம் செய்து வருகின்றன. கொரோனா பாதித்த இந்த காலத்திலும், தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 25 ஆயிரத்து 527 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாகவும் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதோடு வேலைவாய்ப்பும் உருவாகும்.