காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவில் இணைகிறார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத் உளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த புவனேஸ்வர் காலிட்டா, காங்கிரஸ் கட்சி தற்கொலை செய்யும் நிலையில் உள்ளதாகவும், கட்சியை அழிவில் இருந்து மீட்க வேறு வழியில்லை என்பதால், தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு பாஜகவில் அவர் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version