மறைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அதிமுக விவசாய அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாய அணியின் மாநில செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாசி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, வரக்கூடிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், 2021சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தொண்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.