ஆரணியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சைக் கேட்பதைவிட, பரிமாற்றப்பட்ட பிரியாணிக்கு தொண்டர்கள் போட்டி போட்டது நகைப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அறிமுக செயல்வீரர் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, பேசும் போது, கேட்க ஆட்கள் இன்றி, திருமண மண்டபத்தில் காலியான இருக்கைகள் மட்டும் இருந்து வெறிசோடி காணப்பட்டது. இருப்பினும், பிரியாணி சாப்பிட தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. செயல் வீரர்கள் கூட்டம் தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
Discussion about this post