கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 10வது கூட்டம், டில்லியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர், நவீன்குமார் தலைமையில் நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, பெங்களூரு சென்றுள்ளது. கர்நாடக அரசு, கடந்த ஜூன் மற்றும் ஜூலையில், 30 டி.எம்.சி., நீரை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. ஆகஸ்டு மாதத்திற்கு 45.93 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டி உள்ளது. இதுகுறித்து, காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த உள்ளது. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும்.
Discussion about this post