தாராநல்லூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கைகலப்பு

திருச்சி தாராநல்லூரில், திமுக கூட்டணியில் உள்ள திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் மேடையின் அருகே கோஷமிட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், காவல்துறையினர் முன்னிலையிலேயே, கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒரு வழியாக காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக கூட்டங்களில்தான் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அது தற்போது, அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களுக்கும் தொற்றிக் கொண்டதில் ஆச்சர்யமில்லை…

Exit mobile version