மகாராஷ்டிரா, அரியானா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக பாஜகவின் தேர்தல் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அடுத்த மாதம் 21ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜகவின் தேர்தல் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதுடன், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.