சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து நலம் விசாரித்தார்.
அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு திருநாவுக்கரசர் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், உடல்நலம் குறித்து விசாரிக்கவே விஜயகாந்தை சந்தித்ததாக கூறினார். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றியும் பேசியதாக தெரிவித்தார்.