முதல்வரை சந்தித்து விளையாட்டு வீரர்கள் வாழ்த்து பெற்றனர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விளையாட்டு வீரர்கள் பலர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு அவர் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற உலக கோப்பை கராத்தே போட்டியில் பங்கேற்று 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கங்களை வென்ற சேலம் அணியினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்று 5 தங்கம், 18 வெள்ளி, 6 வெண்கலம் வென்ற வீரர்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version