சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மீண்டும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக வர்மா நீக்கப்பட்ட பிறகு இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிபிஐக்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்காக கடந்த 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில், சிபிஐ இயக்குநர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று உயர்மட்டக்குழு கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.