மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய்க் காப்பு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி திருவாதிரையை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு உற்சவம், உறவை நாட்களில் தினந்தோறும் மாலை வேளைகளில் நடைபெறும். கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தவர்கள் அடங்கிய படி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். மங்கல வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு தைலக்காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு வெள்ளி சப்பு கொண்டு தலை வாருதல், மூலிகை எண்ணெய் தேய்த்தல், கண்ணாடியில் முகம் பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அம்மன் பல்லக்கில்,நான்கு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.