தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் அவர் அடைந்த புகழ் ஏராளம். திருமணத்திற்கு பிறகு சில மலையாளப்படங்களில் நடித்த நடிகை மீனா தனது மகள் நைனிகாவை, “தெறி” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் நடிகை மீனா தற்போது வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். முழுக்க முழுக்க ஹாலிவுட் ஸ்டைலில் கலக்கும் இதன் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார் மீனா. இதற்கு “கரோலின் காமாட்சி” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் பாலாவின் உதவியாளர் விவேக்குமார் கண்ணன் இயக்குகிறார்.
இதில் மாஃபியா கும்பலை பிடிக்கும் இரு கமாண்டோக்களின் கதையாகும். இதில் ஒரு கமோண்டாவாக நடிகை மீனாவும், மற்றொரு கமேண்டாவாக இத்தாலி மாடல் அழகி ஜியார்ஜியோ ஆண்ட்ரியானியும் நடிக்கிறார்கள்.