கேரளாவில் நிபா வைரஸ் பரவியதையடுத்து, தமிழக – கேரள எல்லையான புளியரையில் மருத்துவ குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதேபோல் தமிழக அரசின் சார்பில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக – கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, அதில் பயணம் செய்பவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா..? என்பது குறித்து மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் சுகாதார ஊழியர்கள் நோய் தடுப்பு மருந்துகளையும் தெளித்து வருகின்றனர்.