தூத்துக்குடி ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், டேங்கர் லாரிகள் மூலம் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் 98 சதவீதம் தூய்மையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5 கிலோ லிட்டர் ஆக்சிஜனை 2 டேங்கர் லாரிகள் மூலம் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், ஆலையின் கண்காணிப்பாளருமான செந்தில்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முதற்கட்டமாக 5 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, அடுத்த 2 நாட்களில் தினசரி 10 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
வரும் நாட்களில் 35 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்படும் என்றும் கூறினார்.