மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்தது

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 23 அரசு மருத்துவ கல்லூரிகளில், சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனகரம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி முதல், தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் சுமார் 146 இடங்கள் காலியாக உள்ளதாகவும், 12 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 69 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 24 இடங்களும், 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 24 இடங்களும், மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனை நிரப்புதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 30 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனகரம் அறிவித்துள்ளது.

Exit mobile version