டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் !

 

டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு பழனி சித்தா அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மழைக்காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ஹோமியோபதி மற்றும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கு பழனி சித்தா அரசு மருத்துவமனை சார்பில் ரயில் நிலையம்,அரசு மருத்துவமனை, பள்ளிவாசல், பாத விநாயகர் கோவில், மற்றும் சர்ச் ஆகிய முக்கிய இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

மேலும், அரசினால் பராமரிக்கப்படும் மூலிகை தோட்டத்தையும் மக்கள் பார்வையிட்டு சென்றனர். மூலிகை தோட்டம் அமைப்பது குறித்தும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில், பழனி அரசு தலைமை மருத்துவர் விஜய் சேகர் மற்றும் மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

Exit mobile version