டெல்லி சி.ஏ.ஏ. போராட்ட குழுவினருடன் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லி ஷாகீன் பாக் போராட்டக் குழுவினருடன், உச்சநீதிமன்றம் நியமித்த இரண்டு மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லி ஷாகீன் பாக்கில், 2 மாதங்களாக போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷாகீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், போராட்டத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லி ஷாகீன் பாக் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த, இரண்டு மத்தியஸ்தர்களை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர்களான சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் போதாது என்று போராட்டக்காரர்கள் கூறியதால், நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என உச்சநீதிமன்ற மத்தியஸ்தர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version