சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வீரவணக்க தினத்தையொட்டி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களுக்கான விருதினை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். டெல்லியின் தேசிய காவலர் நினைவகத்தில் இன்று சி.ஆர்.பி.எஃப் வீரவணக்க தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
முன்னதாக உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராம்நாத் கோவிந்த், நிகழ்ச்சியில் உரையாற்றினார். நிகழ்ச்சியையொட்டி, வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.