நைஜீரியா அருகே சென்ற கப்பலுடன் 18 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரியா அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு செய்துள்ளது.
ஹாங்காங் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய்யுடன் சென்ற கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நைஜீரிய கடல் பகுதியில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 18 பேரை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு செய்துள்ளது.