ஈரோடு மாவட்டம் தாளவாடியை அருகே அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை எடை போடுவதற்காக வே பிரிட்ஜ் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாளவாடி மலைப்பகுதி அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதனால், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி ஆசனூரில் வாகனங்களை எடைபோடும் வே-பிரிட்ஜ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அதன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சோதனைச்சாவடி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால், வாகனங்கள் எடை போட்ட பின்னரே வனப்பகுதிக்கு அனுமதிக்கப்படுவதால், விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.