விழுப்புரத்தில் டெங்கு மற்றும் மலேரியா நோய்களை தடுக்க நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களை டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் பாதிக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார். நிலவேம்பு கலந்த குடிநீர் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். காய்ச்சல் தடுப்பு மருத்துகள் அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மருத்துவ அலுவலர் சாந்தி தெரிவித்தார்.

Exit mobile version