தேனியில் ஆவின் பால் விற்பனையை பெருக்குவதற்கு நடவடிக்கை

தேனியில் ஆவின் பால் விற்பனையை பெருக்குவதற்காக வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது

தேனி ஆவின் மண்டல கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அலுவலகத்தில் ஆவின் பால் விற்பனையை பெருக்குவதற்காக வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்து வருகின்றனர்.

ஆவின் உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுயவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும், விற்பனையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் இந்த பணி நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் துணை சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்றன.

 

Exit mobile version