280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும் என ரயில்வே விகாஸ் நிகாம் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என ஜனவரி மாதம் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதனடிப்படையில், பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான கடல் மண் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல் நாட்டினர். இதனையடுத்து, தற்போதைய பாம்பன் ரயில் பாலத்தின் அருகே 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாலம் கட்டுவதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என ரயில்வே விகாஸ் நிகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.