குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

கோபிசெட்டிபாளையம் அருகே 70க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த செங்கோட்டையன் நகர் கிராமத்தில் கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வெள்ளாளபாளையம் – வெள்ளாங்கோயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி வெள்ளாளபாளையம் – வெள்ளாங்கோயில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 74 குக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் செங்கோட்டையன் நகர் நீருந்து நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டரை லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு தரைமட்ட தொட்டிகள் மற்றும் புதிய குழாய்கள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version