ஹைதராபாத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிய சித்தார்த்தி பிரதாப். திருமணம் செய்ய என்னுடைய வேலை தடையாக உள்ளது என்று ராஜினாமா கடிதம் எழுதிய காரணம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் சித்தார்த்தி பிரதாப். அவர்க்கு 29 வயது ஆகிறது. அவர் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி சிட்டி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடித்தில் அவர் கூறிய காரணம், என்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த சீனியர் கான்ஸ்டபிள் 40 வருடம் ரொம்ப சிரியஸ் ஆகவும், கடுமையாகவும் உழைத்தவர். இவ்வளவு உழைத்த அவர்க்கு எந்த ஒரு உயர் பதவியும் கிடைக்கவில்லை. அதே நிலை தான் எனக்கும் என்ற அச்சம் உள்ளது.
எனக்கு தற்போது, 29 வயதாகிறது. எனக்குத் திருமணம் நடத்த பெற்றோர்கள் பெண் பார்த்து வருகிறார்கள். ஏனோ, காரணம் தெரியாமல் பெண் வீட்டார்கள் என்னை திருமணம் செய்து கொடுக்க மறுத்து கொண்டு வருகிறார்கள். அதை பற்றி விசாரித்த போது தான், நான் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருவதால் எந்த ஒரு பதவி உயர்வும் கிடைக்காது. 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால் என் குடும்பத்தை கவனிக்க முடியாமல் போகிவிடும் என்கிற காரணங்களால் எந்த பெண்களுக்கும் என்னை மணமுடிக்க விரும்பவில்லை. பெண் வீட்டார்களும் அதையே சொல்லி என்னை தவிர்க்கார்கள்.
ஆகையால், என்னுடைய எதிர்காலம் நினைத்தபடி இருக்காதென்பதால் என் கான்ஸ்டபிள் பணியை ராஜினாமா செய்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.