சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தரியை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியும், தலைமை நீதிபதி இல்லாத நேரத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தரியை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், 24 ஆம் தேதிக்குள் வினீத் கோத்தரி பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியாக வினீத் கோத்தரி நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version