எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் ஜூன் 5ம் தேதி முதல் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்தாம் தேதி மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் ஒன்று புள்ளி 37 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வின் முடிவுகள், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது . அன்றைய தேதியில் இருந்தே, தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள 7 ஆயிரம் இடங்களுக்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.