விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையான மயிலத்தை தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்தாலும், தமிழக அரசு நிதி ஒதுக்கி கிராமங்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து வருவதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.