தமிழகத்தின் 38வது மாவட்டமாக உருவாகும் மயிலாடுதுறை

நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறையை பிரித்து தனிமாவட்டமாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக வசதிகளுக்காக ஏற்கனவே 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. அதன்படி புதிதாக தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாகப்பட்டிணம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என மார்ச் 24 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இந்நிலையில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.

Exit mobile version