மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக விவசாயிகள் பயிரிட்ட பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. இந்த நிலையில், சேதமடைந்த பயிர்களுக்கு ஹேக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் , மேலும் சேதமடைந்துள்ள பயிர்களை மறு சாகுபடி செய்ய ஹேக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.