தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று உதயமாகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. புதிய மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக ஆர்.லலிதா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தொடங்கி வைக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய மாவட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.