கொப்புடையம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயிலில் வைகாசி பிரமோற்சவத்தையொட்டி நடத்தப்பட்ட தேரோட்டத்தில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் கொப்புடையம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இந்தத் தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர், சகோதரி காட்டம்மன் கோயிலை சென்றடைந்தது. மீண்டும் தேர் காரைக்குடி வந்தடையும்.

Exit mobile version